பக்கம்:பாரி வேள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சச் செயல்

பறம்பு மலையை முற்றுகை யிட்டுப் பயனின்றி மீண்டு சென்ருலும், சேர சோழ பாண்டியர்களுக்குப் பகை யுணர்ச்சி மாறவே இல்லை. அடியுண்ட வேங்கை மீட்டும் கறுவுவது போல் அவர்கள் சினம் பின்னும் மிகுதியாயிற்று. நேர்மையான வழியில் பாரியை வெல்ல முடியாதென்பதை நன்கு உணர்ந்த அவர் கள், வஞ்சகமான முறையிலாவது அவனை மடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டனர். "எவ்வாறு பிறர் அறியாமல் அவனை வெல்வது?' என்ற யோசனையில் ஆழ்ந்தனர். அவர்களுடைய உடம்பு பாரி எய்த அம்பினுல் புண்படவில்லை. ஆனுலும் அவர் களுடைய உள்ளங்கள் கபிலர் எய்த பாடல்களால் புண்பட்டிருந்தன. அந்தப் பாட்டுக்கள் அவர்களை எள்ளி நகையாடின. பாடல்களின் ஒவ்வொரு சொல் லும் மன்னர்களின் மானத்தைக் குலைத்தது; வீரத்தை இழிவு செய்தது; உள்ளத்தைத் தொளைத்தது; அவற்றை எண்ண எண்ண அவர்களுடைய கோபக் கனலில் நெய் வார்த்தது போலாயிற்று. -

பாடலில் ஒவ்வொன்றும் பெரும் படையைப்போல அவர்கள் உள்ளத்திலே விரிந்து உருவெடுத்து நின்றது; மீட்டும் மீட்டும், '# பாணர்களுக்கும், விறலியர்களுக்கும் எளிய இந்த மலை உங்க ளுக்கு அரிது’ என்று கூறியது அவர்கள் உள்ளத்தை உறுத்தியது. ஆல்ை அந்த உறுத் தலிலே அவர்களுக்குரிய வஞ்சக வழியும் புலப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/70&oldid=583888" இலிருந்து மீள்விக்கப்பட்டது