பக்கம்:பாரி வேள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சிச் செயல் 65

அடைத்துக் கிடந்தமையால் வீரர்களும் தம் மனம் போன போக்காக விரும்பின இடங்களுக்கெல்லாம் போய் வந்தார்கள்; உண்பன உண்டு, பூசுவன பூசி, உடுப்பன உடுத்து இன்புற்ருர்கள். -

இப்படி இருந்த காலத்தில்தான் மன்னர்கள் ஏவி விட்ட வஞ்சப்பாணர் பாரியை நாடி வந்தனர். யாழிசையாலும் வாய்ப்பாட்டாலும் பாரியை மயக்கினர். சில நாள் அவன் இட்ட விருந்தை அருந்திப் பறம்பு மலையின் மேல் தங்கினர்; மலைவளங் காண வேண்டு மென்று அவனையும் அழைத்துக்கொண்டு சென்றனர். அவனுடன் வந்த மெய் காவலரை ஏதோ ஏவல் சொல்லி அனுப்பிவிட்டனர். பறம்பு ம்லையின் மேல் மரங்களடர்ந்த சூழலில் தன்னைச் சேர்ந்தவர் யாரும் இல்லாதபோது பாரி, வஞ்சகப் பாண வேடம் புனைந்த பாதகன் ஒருவனது வாளுக்கு இரையானன். புலவர் களுக்கு வற்ருது மல்கிய ஊற்று வற்றியது. பொய் யாது பெய்த மேகம் வறண்டது. கற்பக மரத்தை அருமை அறியாத பாவி வெட்டிவிட்டான். காமதேனு

வைக் கொன்றுவிட்டான்!

இந்தச் செய்தி பிறருக்குத் தெரிவதற்கு முன்னே. அந்த வஞ்சகக் கூட்டத்தார் தம் வேடத்தை மாற்றிக்கொண்டு பறம்பு மலையை விட்டுப் போய்

குத்துண்ட பாரி குருதி வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டவர்கள் அலறிஞர்கள். பறம்பு நாடே திரண்டு. வந்தது. புலவர்கள் கூடினர்கள். கபிலர் இந்தச் செய்தியைக் கேட்டு ஓடி வந்தார். இந்த நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/74&oldid=583892" இலிருந்து மீள்விக்கப்பட்டது