பக்கம்:பாரி வேள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரி வேள் -

வற்றையும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்துகொண்டிருந்தால் நாம் அரசாள முடியாது. பகைவரை வேரோடு களைந்தெறியாவிட்டால் நமக்கு அமைதியே இராது. எந்த வழியிலாவது பகையை அழித்தல் அரசர்களின் முதற்கடமை. பாரியை ஒழிக்க வழி கண்டு விட்டோம் என்று மகிழ்வதற்கு மாருக நீங்கள் அஞ்சுகிறீர்கள். அவனுடைய காலடியில் விழுந்து கிடப்பதைப் போல அவன் மலையடியில் எத் தனை காலம் நம் படைகள் கிடந்தன! அதை நினைத்துப் பார்த்தீர்களா? நாம் பறம்பை முற்றுகை யிட்டும் பாரியை வெல்ல முடியவில்லை என்ற பழி இப் பொழுதே நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. இனி நமக்குப் புதியதாகப் பழி வரவேண்டுமா? பழி வராமல் செய்ய வழி உண்டு. நாம் அனுப்பிய ஆள்தான் பாரியைக் கொன்ருன் என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? சிறிதும் உண்மையை வெளியிடாமல், உயிர் போனுலும் நம்மைக் காட்டிக் கொடுக்காத ஒற் றர்கள் நம்மிடம் இல்லையா? அவர்கள் மூலமாக நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வோம்' என்று தன் திட்டத்தை விளக்கினன் சோழன். சேரனும் அவ னுடன் சேர்ந்து பாண்டியனுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேசின்ை. இறுதியில் பாண்டியன் இந்தப் பாதகச் செயலுக்கு அரை மனத்தோடு இணங்கினன்.

. . - · : .

கபிலர் ஊரில் இல்லை. தம்முடைய நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தார். இனிமேல் பாரியை யாரும் எதிர்த்துப் போரிட வரமாட்டார்கள்' என்ற எண்ணத்தில்ை அவர் பாரியைப் பிரிந்து சில நாள் சென்றிருந்தார். சில காலமாக மலையின்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/73&oldid=583891" இலிருந்து மீள்விக்கப்பட்டது