பக்கம்:பாரி வேள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சச் செயல் 63

அவன் கையில் யாழைக் கொடுத்து, அவன் பின்னே நன்ருகப் பாடும் பெண் ஒருத்தியை விறலியாக அனுப் பினுல் நம் காரியம் எளிதிலே கைகூடும்.' -

சேரனுக்கும் பாண்டியனுக்கும் இப்போதுதான் சோழனுடைய கருத்து விளங்கியது.

"யாழ் மீட்டும் கையாலே பாரியைக் கொன்றுவிட லாம் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டான் சேரன். - . . J. -

ஆம், ஆம்' என்ருன் சோழன். - 'பாரியைக் கொல்வதா!" என்று திடுக்கிட்டான் பாண்டியன். . . . . . - - - "கொல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து செய்விப்பதா? பாம்பு எவ்வளவு அழகுள்ள தாக இருந்தாலும் நஞ்சுடையதுதானே?' என்று சோழன் பாண்டியனை நோக்கிக் கூறினன்.

'வஞ்சனையால் பாரியைக் கொன்ருல் உலகம் உள்ளளவும் பழி நம்மை விடாதே. இந்தப் பாடல் களைக் கண்டு அஞ்சி வந்தோம் நாம். இப்போது கொலை செய்யும் பழிக்கு ஆளாக முற்படுகிருேமே! அது தக்கதுதான? யோசித்துப் பாருங்கள்' என்று வழுதி மெலிந்த குரலில் கூறினன். தமிழ்ப் புலவர் களுக்குக் கற்பகம் போல விளங்கும் பாரியைக் கொல்ல அவன் மனம் இணங்கவில்லை. அப்படிச் செய்து விட்டால் உலகம் முழுவதும் ஒரே குரலாக எங்கே சென்ருலும், நீ பழிகாரன், நீ கொலைகாரன்' என்று பழி கூறுமே என்றெண்ணி அஞ்சின்ை.

பாண்டியனுடைய இரக்கத்தையும் அச்சத்தையும் கண்டு சோழன் நகைத்தான். "அரசியலில் இத் தகைய செயல்களைச் செய்வது முறைதான். எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/72&oldid=583890" இலிருந்து மீள்விக்கப்பட்டது