பக்கம்:பாரி வேள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 - - பாரி வேள்

இன்று இருக்கும் நிலை என்ன அவர்கள் உள்ளத்தே துயரம் பொங்கியது; பெருமூச்சு விட்டார்கள்; கண் களில் நீர் தேங்கியது. சிறிது நேரம் கழித்து அந்தக் கண்ணிர் கவிதையாக வழிந்தது. -

'அன்று, ஒரு மாதத்துக்கு முன்பு, வெண்ணிலா வீசியபோது, எங்கள் தந்தையார் இருந்தார். எங்கள் குன்றை யாரும் கைப்பற்றவில்லை. இந்த மாதம் இதோ வெண்ணிலா வீசுகிறது. பகையரசர் எம் குன்றத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். எம் தந்தை யும் இப்போது இல்லை என்று அந்தச் சோக கீதம் புறப்பட்டது. ‘. . . . . . . - -

அற்றைத் திங்கள் அவ்வெண் னிலவின் 'எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்; இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றுஎறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!’ - இந்தப் பாட்டைக் கேட்டார் கபிலர். அந்தப் பெண்களின் இள நெஞ்சிலுள்ள துயரப் பிழம்பை அது உருவாக்கிக் காட்டியது. அவர் தம் துய ரத்தை அடக்கிக் கொண்டிருந்தார், இந்தப் பாட் டைக் கேட்ட பிறகு அவரால் அடக்க முடியவில்லை. அது தடை போட்டும் நில்லாமல் பீறிக் கொண்டு புறப்பட்டது.

அவர் தம்முடைய துயரத்தை யாரிடம் சொல்லிக் கொள்வார்? அந்தப் பறம்பு மலையைப் பார்த்தே சொன்னர். "பறம்பு மலையே; உன் மலையைக் கண்டு

அற்றைத் திங்கள்-அந்த மாதம், எறி-முழங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/79&oldid=583897" இலிருந்து மீள்விக்கப்பட்டது