பக்கம்:பாரி வேள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர் வெள்ளம் 7s

எனக்குத் துயரம் பொங்குகிறது. பாரி இருந்த காலத் தில் எவ்வளவு சிறப்பெல்லாம் உன்னிடம் நிகழ்ந்தன! எப்போது பார்த்தாலும் விருந்துணவை உண்டோம். பல வகையான உணவுகளை எப்போதும் சமைத்துக் கொண்டே இருந்தார்கள். நீ எங்களுக்கு விருப்பமுள்ள உறையுளாக இருந்தாய். இப்போது நாங்கள் உன்னை விட்டுப் போகிருேம். பாரி பிரிந்து விட்டான். கண் னிரும் கம்பலையுமாக, உன்னைப் புகழ்ந்து, இந்த இளம் பெண்களுக்கு ஆதரவான மளுளரைத் தேடிக்கொண்டு போகிருேம்' என்று அவரும் தம் வருத்தத்தையெல் லாம் கொட்டிப் பாடினர்." - -

சிறிது தூரம் சென்ற பிறகு மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தார். பறம்பு மலையின் அருவியைப் பார்த்தார். "பாரி இருந்தபோது இந்த அருவி மட்டுமா இருக்கும் ? ஒரு பக்கம் அருவி ஓடும்; மற் ருெரு பக்கம் பாணருடைய பாத்திரத்தில் நிறைய வார்த்த தெளிந்த கள் வழிந்து ஓடும். இப்போது-?.

  • மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும், அட்டான்று ஆனக் கொழுந்துவை ஊன்சோறு, பெட் டாங்கு ஈயும் பெருவளம் பழுனி, கட்டனே மன்னே முன்னே இனியே, பாரி மாய்க்தெனக் கலங்கிக் கையற்று, நீர்வார் கண்ணேம் தொழுதுகிற் பழிச்சிச், சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே, கோல்திரள் முன்கைக் குறுக்தொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே." (புறநானூறு, 118.) .

மட்டு - கள். மைவிடை - ஆட்டுக் கிடாய். அட்டு ஆன்று ஆன சமைத்து முடிந்தும் முடியாத, துவை-துவை யல், பெட்டாங்கு-விரும்பியபடி. பழுனி-கிறைந்து. கை அற்று-செயலிழந்து. பழிச்சி-புகழ்ந்து. சேறும்-செல்வோம். கோலாகத் திரண்ட தொடி தொடி-வளை. கூந்தற் கிழவர். கணவர். படர்ந்து-காடி ; : * r -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/80&oldid=583898" இலிருந்து மீள்விக்கப்பட்டது