பக்கம்:பாரி வேள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - பாரி வேள்

மன்னர்களுக்கெல்லாம் பொல்லாதவனுன்ை பாரி; ஆனல் எங்களுக்கு எத்தனை இனியவன்! அவன் குன்று இன்று இருக்கும் நிலை என்ன? என்று இரங்கினர். . . . -

மீண்டும் அம் மூவரும் நடக்கலானர்கள். பல நாள் மூவேந்தர் படையும் முற்றுகையிட்டபோது உழ வர் உழாத நான்கு வகை உணவுகளைத் தந்த பறம் பைப் பிரிந்து செல்ல முடியாமல் தியங்கித் தியங்கி நின்ருர்கள். மறுபடியும் கபிலர் திரும்பிப் பார்த்தார். இப்போது அவர்கள் நெடுந்துாரம் வந்துவிட்டார்கள். மலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்தது. இன் னும் சிறிது தூரம் போகிற வரைக்கும் அது கண்ணுக் குத் தெரியும். அப்பால் அது மறைந்து போகும். கபிலர் இதை நினைந்தார். "இந்தக் குன்றம் கண்ணி லிருந்து மறைந்து போகும். ஆனல் இதை மறந்து போக முடியாது' என்று வருந்தினர். "இங்கு நின்று பார்த்தால் தெரிகிறது; இன்னும் சிறிது தூரம் சென்று பார்த்தாலும் தெரியும். அப்புறம்-? அவர் கலங்கினர். - -

ஈண்டு நின் ருேர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று தின் ருேர்க்கும் தோன்றும் மன்ற . . . என்று பாட்டு வந்தது. குன்றம் புறக் கண்ணுக்கு மறைந்தாலும் அகக் கண்ணில் அவர்கள் கண்ட பழைய காட்சிகள் மறையுமா? பறம்பு மலையில் எங்கே பார்த்தாலும் தேனடைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு வந்து பிழிந்து கோதைப் போட்டு விடுவார். கள். நிறையக் கரும்புக் கட்டை யானைக்குக் கவள மாகக் கொடுக்கையில் அது அதன் சாற்றையெல்லாம். உறிஞ்சிவிட்டுச் சக்கையைப் போட்டால் எப்படியிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/81&oldid=583899" இலிருந்து மீள்விக்கப்பட்டது