பக்கம்:பாரி வேள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர் வெள்ளம் - 73

குமோ, அப்படியிருக்கும் அந்தக் கோதுக் குவியல். அதிலிருந்து தேன் கசிந்துகொண்டிருக்கும். பாரியின் அரண்மனை முற்றத்தில் இந்தக் காட்சியைக் கண்டவர் கபிலர். பாரி தன்பால் வந்தவர்களுக் குத் தேரை வழங்குவதையும் கண்டிருக்கிருர், முல்லைக்கொடிக்கே தேரை வழங்கினவன் மற்றவர் களுக்கு வழங்குவது என்ன வியப்பு? இந்தப் பழைய காட்சிகள் அவருடைய அகத்தே ஒன்றன்பின் ஒன் ருகத் தோன்றின. "இத்தகைய இனிய காட்சிகளைப் பெற்றிருந்த குன்றல்லவா இது?" என்று எண்ணி நெடுமூச் செறிந்தார். - -

ஈண்டுதின் ருேர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று நின் ருேர்க்கும் தோன்றும் மன்ற! களிறுமென்று இட்ட கவளம் போல நறவுப்பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் வார்.அசும்பு ஒழுகும் முன்றில் தேர்விசு இருக்கை நெடியோன் குன்றே. இப்படி அவர் புலம்பிக்கொண்டே சென்ருர். பறம்புமலை கண்ணுக்கு மறைந்தது. அவர்களுடைய துயர் கண்டு பொருதவன்போலச் சந்திரனும் மறைந் தான். இனி இவர்களுக்கு விரிந்த உலகத்தைக் காட்ட வேண்டுமென்று தோன்றியவனைப் போலக் கதிரவன் உதயமானன். பறம்பு நாட்டின் கடைசி எல்லையை அவர்கள் அணுகிக் கொண்டிருந்தார்கள்.

  • சிறுவரை-கிறிது துர்ரம். கறவு-தேன். சிதறல்சக்கை. வார் அசும்பு-கசிந்த தேன் குழம்பு. ஒழுகும்ஒடும். முன்றில்-முற்றம். முன்றிலேயும் இருக்கையையும் உடைய நெடியோன்; என்றது. பாரியை. தோன்றும் என் ருலும் இனி மறையும் என்ற் குறிப்பை உடையது. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/82&oldid=583900" இலிருந்து மீள்விக்கப்பட்டது