பக்கம்:பாரி வேள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாரி வேள்

- 'பறம்பு மலை மறைந்தது. இனிப் பறம்பு நாட்டை யும் விட்டுப் போய்விடுவோம்' என்று நினைத்த போதே அந்த நினைவு கபிலர் உள்ளத்தை வாள் போட்டு அறுத்தது. அப்போது அவர்கள் நடந்து சென்ற இடம் வளம் சுருங்கிய இடமாக இருந்தது. ஈச்ச மரங்களையன்றி வேறு நிழல் மரங்கள் இல்லாத இடம் அது. சிறிது தூரத்தில் உப்பு வண்டிகளை ஒட்டிக்கொண்டு சென்ருர்கள், உப்பு வாணிகர். வண்டிகள் ஒன்றன் பின் ஒன்று நீண்ட சாரியாகச் சென்று கொண்டிருந்தன. -

ஈச்ச மரத்தின் அடியில் ஒரு சிறிய மேடு ஈந் திலைகள் உதிர்ந்திருந்த மேடு அது. அங்கவையும் சங்கவையும் அந்த மேட்டின் மேல் ஏறித் தூரத்தில் சென்ற உப்பு வண்டிகளைப் பார்த்தார்கள். அடே அப்பா எத்தனை வண்டிகள்!" என்று வியந்தார்கள். அவர்கள் முன்பு பாராத காட்சி இது; வறண்ட பாலை நிலத்தில் நிகழ்வது. அவர்கள் அந்த வண்டிகளை, "ஒன்று இரண்டு" என்று எண்ணத் தொடங்கி ஞர்கள். - -

அவர்களுடைய வாழ்க்கை பாரியை இழந்த மையால் வறண்ட பாலை ஆகிவிட்டது. இப்போது நிற்கும் இடமும் பாலை நிலம். இந்த நிலையிலும் இளம் பருவத்தின ராகையால் அவர்கள் தம் துன் பத்தை மறந்து விநோதமாக உப்பு வண்டிகளை எண் ணிக்கொண்டிருந்தார்கள். . . ."

இதைக் கண்டபோது கபிலருக்குத் துயரம் பொங்கி வந்தது. "ஐயோ! இப்படித்தானே அன்றும் எண்ணினர்கள்!” என்று எண்ணி மனம் சாம்பினர், முடி மன்னர்கள் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/83&oldid=583901" இலிருந்து மீள்விக்கப்பட்டது