பக்கம்:பாரி வேள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயர் வெள்ளம் ?5

போது ஒரு நாள் அம் மலையில் இருந்தபடியே கீழே தெரிந்த குதிரைகளை அந்த இரண்டு பெண்களும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். அது இப்போது கபி லரின் நினைவுக்கு வந்தது. "அன்று தங்களுக்குரிய பறம்பு மலையில் நின்று சிறிதும் அச்சமின்றிப் போர்ப் படையில் இருந்த குதிரைகளை எண்ணினவர்கள், இன்று ஈச்ச மரத்தின் இலைகள் குவிந்த இடத்தில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணும்படி ஆயிற்றே!”* என்று நைந்தார். - -

பாலை நிலத்தை அவர்கள் கடந்தார்கள். முல்லை நிலம் வந்தது. அங்கே அரும்புகள் நிறைந்த முல்லைக் கொடியைக் கண்டார் கபிலர். பாரி முல்லைக்குத் தேர் வழங்கியதை அது நினைப்பூட்டியது. நல்ல வளம் நிறைந்த பிறம்பு நாட்டிலே காடுகள் அடர்ந்த முல்லை நிலம் அதிகம். மழை உரிய காலத்தில் பெய்தமையால் எங்கும் வளம் குறையாமல் இருந்தது. "எத்தகைய உற்பாதம் தோன்றிலுைம் வயலில் பயிர் நிரம்பி வளரும்; செடிகளில் நிறையப் பூ மலரும்; வீடுகளில் கன்று போட்ட பசு வயிறு நிறையப் புல்லைத் தின்று மகிழும். பாரியின் செங்கோலாட்சியில் சான்ருேர் பலர் வாழ்ந்தார்கள். மழையில்லாப் பஞ்சம் என்பதே இங்கு இல்லை. முல்லை நிலத்தில் எங்கே பார்த்தாலும் முல்லைக்கொடி அரும்பு விட்டு அழகாகப் படரும்; இத்தகைய நாடு அல்லவா இது? இதை விட்டுப் போகும்படி விதிசெய்துவிட்டதே' என்று உருகினர். அந்த உணர்ச்சி கவியாக வெளியாயிற்று.

  • புறநானூறு, 116. புறநானூறு, 118.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/84&oldid=583902" இலிருந்து மீள்விக்கப்பட்டது