பக்கம்:பாரி வேள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 - பாரி வேள்

பாரி இறந்துவிட்டமையால் பகை மன்னர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றிக்கொள்வார்கள். தம் மனம் போனபடி அதன் அழகைக் குலைத்துவிடுவார்கள். பகைவர் நாட்டு வயலையும் நீர் நிலைகளையும் ஊரையும் அழிப்பது அக்காலத்தில் மன்னர்களுக்கு வழக்கமாக இருந்தது. 'பாரியின் செங்கோல் திறத்தினுல் மழை திறம்பாத நாடு இது; இனி என்னுகுமோ!' என்பதை எண்ணும்போது கபிலரது வயிறு குழம்பியது.

அங்கே ஒரு சிறிய ஏரி இருந்தது. சிறிய குவடு களையும் பெரிய பெரிய பாறைகளையும் கொண்டுவந்து கரைகளை உறுதியாகக் கட்டியிருந்தார்கள். வளைவான கரையின் மேல் அம் மூவரும் நடந்துசென்ருர்கள். தெளிந்த நீருடன் விளங்கிய அதைப் பார்த்தபோது கபிலர் உள்ளம் கலங்கியது பகை மன்னர் இதை உடைத்துவிடுவார்களே!' என்று வருந்தினர்.

அறையும் பொறையும் மனத்த தயை

எண்ணுள் திங்கள் அனேய கொடுங்கரைக் -

தெண்ணிர்ச் 岛அகுளம் ள்ேவது மாதோ'

கூர்வேம் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரி தண்பறம்பு தாடே

என்ற பாட்டாக அவர் துயரம் உருக் கொண்டது. இப்படியே பறம்பு நாட்டின் பழம்பெருமையை நினைந்

... " பாறைகளும் குவடுகளும் பொருந்திய இடத்தை உடையதும், அஷ்டமி சந்திரனைப் போன்று வளைந்தது மாகிய இந்தக் கரையையுடைய தெளிந்த நீரைப்பெற்ற குளம் உடைந்து போகுமே! கூரிய வேலையும் பருத்த தோளையும் பெற்ற பாரியினது குளிர்ச்சியை உடைய பறம்பு நாடு இத்தகைய அலங்கோலத்துக்கு உள்ளாகுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/85&oldid=583903" இலிருந்து மீள்விக்கப்பட்டது