பக்கம்:பாரி வேள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் மறைவு 87

தங்கள் உதவி இருந்தால் அது நிறைவேறும். இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை யால் என் விருப்பத்தை இதுவரையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமற் போயிற்று. நான் யாத்திரையி லிருந்து மீள்வேன் என்ற உறுதி இல்லை. இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பைத் தங்களிடமே விடுகிறேன். இவர்களுக்கு ஏற்ற கணவன்மார் கிடைப்பார்களானல் தாங்களே இவர்களுக்குத் தந்தையாக இருந்து திருமணம் செய்து கொடுங்கள். உயர் குலத்திற் பிறந்த இந்தப் பெண்கள் விதியின் கொடுமையால் இப்படி வர நேர்ந்துவிட்டது. எனக்கு ஏதேனும் கிடைக்குமானுல் கொண்டு வந்து தருகிறேன்; திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்; இல்லையானல் கடவுள் விட்ட வழி ஆகட்டும்' என்று மிக்க பணிவுடன் கபிலர் அந்த அந்தணரிடம் வேண்டினர். . . . அவர் அதற்கு இணங்கினர். 'நமக்கு இருக்கும் பொல்லாத வேளையில் இதுவாவது நல்லதாக முடிந் ததே! என்று ஆறுதல் பெற்ருர் புலவர் பிரான். பாரி மகளிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறிவிட்டு அவர் புறப்பட்டார். . . . . . . . . . -

பாரிக்குப் பின் உலகில் நல்லவர்களே இல்லை போல் இருக்கிறது!! என்று எண்ணியிருந்த அவருக்குச் சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஈகையிற் சிறந்தவனுக இருக்கிருன் என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. அப்படியால்ை அவனைப் பார்த்து விட்டு வருவோம்' என்று சேர நாட்டுக்குச் சென்ருர். வஞ்சிமா நகரத்தை அடைந்தார். அப்போது அங்கே அரசாண்டிருந்த செல்வக் கடுங்கோ வாழியாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/96&oldid=583914" இலிருந்து மீள்விக்கப்பட்டது