பக்கம்:பாரி வேள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - பாரி வேள்

நீக்க வேண்டும் என்று எண்ணினர். அப்போது அவர் திருக்கோவலூரை அடுத்த ஓர் ஊரில் வந்து தங்கினர். அங்குள்ள அந்தணர்களின் உபசாரத்தைப் பெற்றுச் சில நாட்கள் இருந்தார். அப்போதுதான் இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்தார். -

பாரி மகளிரைக் காணும்போதெல்லாம் கபிலர் மனம் உளைந்தது. மிக்க வருத்தம் இன்றி எளிதிலே அவர்களுடைய திருமணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம், பறம்பு மலையை விட்டு வந்தபோது அவருக்கு இருந்தது. இந்தச் சில நாட்களுக்குள்ளே அந்த எண்ணம் பொடிப் பொடியாகி அழிந்தது. மனம் புண்ணுகி விட்டது. ஒருகால் அவர் உலகத்தை வைதார்; மற்ருெருகால் தம்முடைய ஊழ்வினையை நொந்து கொண்டார்; பின்னும் ஒருகால் பாரி மகளிரின் விதியைக் குறை கூறிஞர். எதைக் குறை. கூறி என்ன பயன்? இனி என்ன செய்வது? என்ற கேள்வியே அவர் முன்னே நின்று அச்சுறுத்தியது. தம்மைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. அந்த இரண்டு பெண்களையும் யாரிடம் விடுவது என்பது பற்றியே அவர் கவலையுற்ருர்.

அவர் தங்கியிருந்த இடத்தில் வாழ்ந்த அந்தணர் மிகவும் அன்போடு அவர்களை உபசரித்தார். சிறந்த ஒழுக்கமும் அன்பும் உடையவர் அவ்வந்தனர். முது மைப் பருவத்தினர். இவரிடமே அடைக்கலமாக விட்டுவிட்டுச் செல்லலாம் என்று தோன்றியது கபிலருக்கு. பெருமானே, இந்த இளம் பெண்களைத் தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன். யாத்திரை செய்யவேண்டும் என்ற விருப்பம் நெடு நாட்களாக எனக்கு உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/95&oldid=583913" இலிருந்து மீள்விக்கப்பட்டது