பக்கம்:பாரி வேள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் மறைவு

கபிலருக்கு உலகத்தைக் காணக் காண வெறுப்பு உண்டாயிற்று. இரண்டிடங்களில் முயன்றும் பாரி மகளிரைக் கொள்ள யாரும் முன் வரவில்லை. இப் படியே ஒவ்வொருவரிடமாகப் போய்க் கொண்டே இருப்பதா? அதைக் காட்டிலும் மானக்கேடான செயல் வேறு இல்லை. நம்முடைய மதிப்புக் குறைந்து விட்டதா? அல்லது இந்தப் பெண்களின் அழகுதான் குறைந்து போயிற்ரு? பாரி இருந்தால் இவர்களுக்கு எத்தகைய சிறந்த கணவர்கள் வாய்ப்பார்கள்! விலை போகாத பண்டத்தை வீடுதோறும் கொண்டு போய், 'நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சுவதுபோல அல்லவா ஆகிவிட்டது என் பிழைப்பு? சீ! இனி இப்படிச் செய் யக்கூடாது. இவர்கள் தலைவிதியின்படி எல்லாம் நடை பெறும். இவர்களுக்கு ஏற்ற கணவரைத் தேடி விட் டுத்தான் மறு காரியம் பார்ப்பேன் என்று துணிந்தது பெரிய பேதைமையன்ருே? எல்லாவற்றையும் கூட்டு விக்கும் இறைவன் திருவருள் சுரந்தாலன்றி, எத்தனை முயன்ருலும் நாம் எண்ணியது நிறைவேருது என் பதை எவ்வளவு தெளிவாகக் காண்கிறேன்! இனி இந்தப் பாரத்தை இறக்கிவிட வேண்டியதுதான்' என்று கபிலர் சிந்திக்கலானர். - -

'இவர்களுக்கு மணம் புரிந்து பார்க்க இயலாவிட் டாலும் எங்காவது தக்காரிடத்தில் அடைக்கலமாக ஒப்பித்துவிட்டு நாம் இந்த உலக வாழ்க்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/94&oldid=583912" இலிருந்து மீள்விக்கப்பட்டது