பக்கம்:பாரி வேள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - - பாரி வேள்

எண்ணவில்லை. எங்கோ பிறந்து வளர்ந்த பெண் களை ஒரு தொடர்பும் இல்லாத நீர் கொணர்ந்து தர நான் மணம் செய்துகொள்வதாவது!" என்று இழிவுக் குறிப்புத் தோன்றப் பேசின்ை.

யாருடைய வாய்லுக்கும் சென்று எனக்கு இன்னது வேண்டும் என்று கேட்டறியாத கபிலர், அங்கே வாய் திறந்து தம் விருப்பத்தைச் சொல்லியும் இருங்கோவேள் கேட்கவில்லை. விச்சிக்கோன் அந்தப் பெண்களை மணக்க மறுத்தபோதே அவருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவன் தக்க காரணத்தைக் கூறினன். இங்கே, இருங்கோவேளோ எடுப்பாகப் பேசினன். 'இவனைக் குறைகூறிப் பயன் இல்லை. நாம் வலிய வந்தது பிழை என்று தம்மைத் தாமே அப் புலவர் பெருமான் நொந்துகொண்டார். பாரியைப் பிரிந்து இடிந்துபோன அவர் நெஞ்சம் இப்போது சிதறியது; கோபமும் மூண்டது. 'புலவர்களைப் புறக்கணிப்பதனுல் என்ன கேடு உண்டாகும் என்பதை நீ உணரவில்லை. உன்னுடைய குலத்தில் முன்பு ஒருவன் கழாத்தலையார் என்ற புலவரை - இகழ்ந்தான். அதல்ை அவன் மங்கி மாய்ந்தான். அவனுடைய அரையம் என்ற நகரும் அழிந்தது. உங் கள் குலத்தில் அப்படி ஒருவன் இருந்ததை நினைக்கா மல், எவ்வி என்பவன் பிறந்த குலமாயிற்றே என்று எண்ணி வந்தேன். நான் தெரியாமல் வந்து விட்டேன். நான் சொன்னவற்றைப் பொறுத்துக் கொள். இதோ புறப்படுகிறேன். உன் வேல் வெல்லட்டும்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் அவ்விடத்தை விட்டு அகன்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/93&oldid=583911" இலிருந்து மீள்விக்கப்பட்டது