பக்கம்:பாரி வேள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண முயற்சி 83

மானத்துடன் வாழ முடியாது’ என்ற எண்ணமே அவருள்ளத்தில் மேலோங்கி நின்றது. . மறுபடியும் யாரை நாடுவது?-இதுவே கபில ருடைய கவலையாகிவிட்டது. பெண்ணைப் பெற்ற தந்தைக்குக்கூட இல்லாத கடமையுணர்ச்சியும் ஏக்க மும் அவரிடம் குடிகொண்டன. ஹொய்சள வம்சத் தில் பிறந்தவனும், வேள் எவ்வி என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோவேள் என்ற குறுநில மன்னன் மணமாகாதவன் என்று தெரியவந்தது. அவனை அணுகித் தம் கருத்தை அறிவித்துப் பாரி மகளிரை இல்வாழ்க்கையில் புகுத்தலாம் என்று எண்ணிப் புறப்பட்டார். -

இருங்கோவேள் அரையம் என்னும் மலையை நடுவிலே கொண்ட நாட்டை யுடையவன். பாரி மகளிரையும் அழைத்துக்கொண்டு கபிலர் அவன் இருக்கும் இடத்தை அடைந்தார். இவர்கள் தன்னு டைய நாட்டு ஊர்களையெல்லாம் புலவருக்கும் பாண ருக்கும் அளித்துத் தேரை முல்லைக்கு அளித்த பாரி வேளின் மகளிர். ய்ான் இவர்களின் தந்தைக்குத் தோழன். இவர்களை என் மகளிராகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்தணப் புலவனுகிய யான் இவர்களுக்குரிய மளுளனைத் தேடி வந்திருக்கிறேன். துவார சமுத்திரத்தை ஆண்ட மன்னர் வழி வந்தவன் நீ. வேளிர்களுக்குள் சிறந்த வேள். யான் இவர்களை மணம் புரிந்து தருகிறேன். இவர்களை நீ உன் மனைவி யராக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று அவனிடம் சொன்னர். - - -

அவன் அவர் சொன்னதைப் பணிவாகக் கேட்க வில்லை. அவர்கள் கிடைத்தற்கு அரியவர்கள் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/92&oldid=583910" இலிருந்து மீள்விக்கப்பட்டது