பக்கம்:பாரி வேள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - - பாரி வேள்

கபிலர் இதைக் கூறியவுடன் விச்சிக்கோன், அப்படியே ஆகட்டும்' என்று சொல்லவில்லை. சற்றே யோசித்தான்.

என்ன யோசிக்கிருய்?' என்று கேட்டார் கபிலர். மூவேந்தரும் பாரி மகளிரை விரும்பிப் போர் செய்ததை அவன் அறிந்தவன். அவரைத் தான் மணந்து கொண்டால் அந்த மன்னர்களின் பகை தனக்கு நேருமோ என்று அவன் அஞ்சின்ை. அதனல் தன் வாயிலைத் தேடி வந்தும் திருமகளைப் போன்ற அந்த அழகிகளை மணக்கும் துணிவு அவனுக்கு உண் டாகவில்லை. தன் கருத்தைக் குறிப்பாகக் கபிலருக்குத் தெரிவித்தான். காதல் செய்து மணம்புரிய வேண்டிய அக் கன்னியரை வற்புறுத்தி ஒருவனுக்கு அளிக்கக் கபிலருக்கு மனம் இல்லை. மேல் ஒன்றும் பேசாமல் அவர் பாரி மகளிரையும் அழைத்துக்கொண்டு விச்சிக் கோனிடம் விடை பெற்றுப் புறப்பட்டுவிட்டார். - மூவேந்தர்கள் பாரியினிடம் தூது விட்டு மணக்க விரும்பிய பெண்கள் அவர்கள். அறிவிலும் பண்பிலும் மிக மிகச் சிறந்தவர்கள். அவர்களை முடி மன்னர்களுக் குக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்தான் பாரி. இப்போதோ, கபிலர் தாமாக ஒருவன நாடிச் சென்று, :இவர்களை மணந்து கொள்' என்று சொன்னர். அவன் மாட்டேன் என்கிருன். விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது: தமிழுலகம் போற்றும் கபிலர் விருப்பத்தை அறிந்தும் மறுக்கத் துணிந்தான் விச்சிக்கோன். இதைவிட அப் புலவர் பெருமானுக்கு வருத்தத்தைத் தருவது வேறு என்ன வேண்டும்? உலகம் பொல்லாதது. இதில் இனி நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/91&oldid=583909" இலிருந்து மீள்விக்கப்பட்டது