பக்கம்:பாரி வேள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண முயற்சி 81

கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர். *

பிறகு தாம் வந்த காரியத்தைத் தெரிவித்துப் பாட்டை முடித்தார். 'சினத்தாற் செய்யும் போரில் அடங்காத பகை மன்னரை அடக்கும் ஆற்றலையும் என்றும் குறையாத விளைவையுடைய நாட்டையும் உடையவனே! நான் இப்போது பரிசிலனுக வந்திருக் கிறேன்! ஆதலின் கேட்டதைக் கொடுக்க வேண்டும். நான் அந்தணன்; இந்தக் காரியத்துக்குத் துாது வரும் தகுதி உடையவன். நீயோ யார் யாரை எப்படி வணங் கச் செய்ய வேண்டுமோ அப்படி அடக்கும் வாள் வீரன்; ஆதலின், இப் பெண்களுக்கு ஏற்ற கணவன். உனக்கு நான் இவரை மணம் செய்து கொடுக்க எண்ணுகிறேன். நீ கொள்வாயாக!'

யானே, பரிசிலன்; மன்னும் அந்தணன்; நீயே வரிசையில் வணக்கும் வாள்மேம்படுநன்; நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர் அடங்கா மன்னரை அடக்கும் -

மடங்கா விளேயுள் நாடுகிமு வோயே

  • பூவானது தலையில் என்றும் அரு.த. புனை கொடி - அலங்கரித்தாற் போன்ற கொடி. கறங்கும் - ஒலிக்கும். நெடுங் தேர் - உயரமான தேர். கொள்க எனக் கொடுத்த. - . . . .

+ பரிசிலன் - பரிசில் பெறும் புலவன். வரிசையில் வணக்கும் - பகைவரை அவரவர் திறத்துக்கேற்பப் போர் செய்து வணங்கச் செய்யும். வாள் மேம்படுகன் - வாட் போரில் சிறந்து நிற்பவன். கொண்மதி - கொள்வாயாக. மடங்கா - குறையாத விளேயுள் - விளைவு. கிழவோயே-- உரியவனே.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/90&oldid=583908" இலிருந்து மீள்விக்கப்பட்டது