பக்கம்:பாரி வேள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. பாரி வேள்

"பகைவருடைய உடலின் நிணத்தைத் தின்று களித்த, நெருப்புப் போலப் பளபளக்கும் இலையை யுடைய நெடிய வேலையும், போர்க்களத்தைத் தன் ஆற்றலால் தன்னுடையதாக்கிக் கொண்டு சீறும், எதற்கும் அஞ்சாத கடுமையையுடைய யானையையும், ஒளி விடும் மணிகளைப் பதித்துச் செய்த வளைந்த அணிகலன்களையும் பெற்ற விச்சிக் கோவே' .

தினம்தின்று செருக்கிய நெருப்புத்தல் நெடுவேல்,

களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை,

விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே!"

பின்பு, பாரி மகளிரை இன்னரென்று கூறினர்.

இவர்கள் யார் தெரியுமா? எப்போதும் அலங் கரித்து வைத்தாற்போல மலர்களைப் பெற்று விளங் கும் முல்லைக் கொடியானது, புலவர்களைப் போல

நாவில் தழும்பு உண்டாகும்படி பாடாவிட்டாலும்,

அதன் தளர்ந்த நிலையை நோக்கி, ஒலிக்கும் மணியையுடைய என் தேரை இது கொழு கொம் பாகக் கொள்ளட்டும் என்று கொடுத்தவன், பரவிய புகழையுடையவனகிய பாரி. அவனுடைய மகளிர் இவர்கள்."

இவரே. தத்தல் அரு.அப் புண்கொடி முல்ல . . . . நாத்தழும்பு இருப்பப் பாடா தாயினும்

செருக்கிய-களித்த தலயென்றது வேலின் இலையை.

களம் வென்றவருக்கு உரியதாதலின், களங் கொண்டு என் பது.வெற்றியைக்குறித்தது. கனலும்-கோபம்கொள்ளும். கடுங்கண்-எதற்கும் அஞ்சாத தன்மை. கொடும்பூண்

வ்ளைவான அணிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/89&oldid=583907" இலிருந்து மீள்விக்கப்பட்டது