பக்கம்:பாரி வேள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண முயற்சி 79.

தான். அப்போது தாம் வந்த காரியத்தைக் கபிலரே சொல்லத் தொடங்கினர். பெரும் புலவராதலின் தம் கருத்தைப் பாட்டாகவே சொல்லலாஞர். விச்சிக் கோவின் மலைவளத்தை முதலில் எடுத்துரைத்தார்.

“நின் மலையில் குளிர்ந்த சாரலில் பலாமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன. பச்சைப் பசேலென்று தழைத்த இலைகளும், கண்டால் நாவில் நீர் ஊறச் செய்யும் கனிகளும் அவற்றில் நிறைந்துள்ளன. பலாப் பழத்தை அங்குள்ள ஆண் குரங்கு பறித்து உண்டு அதன் சுவையை உணர்கிறது, உடனே தன் மனைவியாகிய மந்திக்கும் கொண்டு போய் அதனை அளித்து உண்ணச் செய்து மகிழ்கிறது. அப் பால் மலையின் உச்சிக்குப் போய் அங்கே உள்ளே மூங் கிலில் அவ்விரண்டும் துயில்கின்றன. இத்தகைய காட் சிக்கு இடமான மலையை உடையவனே!' -

பனிவரை நிவந்த பாசிலப் பலவின் கனிகவர்ந்து உண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக் - கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்பr . - பிறகு அவனுடைய வேலையும் யானையையும் அணிகலனையும் பாராட்டினர். -

  • பனிவரை-குளிர்ந்தமலைப்பக்கம். கிவந்த-உயர்ந்து வளர்ந்த, பாசிலே-பச்சை இலைகள். கடுவன்-ஆண் குரங்கு. மந்தி-பெண் குரங்கு சேண்-மேலே. மழை மிசை அறியா-மேகமும் உயரத்தை அறியாத. மால் வரை அடுக்கம்-பெரிய மலைத்தொடர். கழை-மூங்கில். கல்லக வெற்ப-கற்களையுடைய மலைக்குத் தலைவனே!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/88&oldid=583906" இலிருந்து மீள்விக்கப்பட்டது