பக்கம்:பாரி வேள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண முயற்சி

பறம்பு நாட்டை விட்டுப் பாதுகாப்பான இடத் திற்குப் பாரி மகளிரை அழைத்துச் சென்ருர் கபிலர். அவருக்கு இப்போது ஒரே ஒரு கடமைதான் முன் நின்றது. அந்த இரண்டு பெண்களையும் தக்க கண வருக்கு மணம் செய்துகொடுத்து விட்டால் அப்பால் இவ் வுலகில் வாழ வேண்டிய அவசியம் அவருக்கு இராது. பாரி இல்லாத உலகத்தில் வாழ அவர் விரும்பவில்லை. ஆகவே, யாருக்கு அப் பெண்களை மணம் செய்து கொடுப்பது என்ற ஆராய்ச்சியே

அவருக்குப் பெரிதாயிற்று

தமக்குத் தெரிந்தவர்களைப் பற்றி யெல்லாம் நினைந்து பார்த்தார். அறிந்தாரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டார். விச்சி என்ற மலைக்குத் தலைவ கை இருந்த விச்சிக்கோன் என்னும் சிற்றரசனைப் பற்றிக் கேள்வியுற்ருர். விச்சி மலை நல்ல வளமுடை யது என்பதை அவர் முன்பே அழிவார். ஆதலின்

அவனை அணுக எண்ணினர்.

பாரியின் மகளிரை அழைத்துக் கொண்டு விச்சி மலைக்குச் சென்ருர். பலமுறை வேண்டிய பின்னர் வருவதற்குரிய அந்தப் பெரும் புலவர் தன்னை நாடி வந்ததனை அறிந்து விச்சிக்கோன் வியந்தான்; அன் புடன் வரவேற்ருன்; பாரி வேளை வஞ்சனையால் யாரோ கொன்றனர் என்ற செய்தியை அவன் அறிந் திருந்தான். கபிலரைக் கண்டு வணங்கி, இருக்கச் செய்தான். அவருடன் வந்திருந்த பெண்களைப் பார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/87&oldid=583905" இலிருந்து மீள்விக்கப்பட்டது