பக்கம்:பாரி வேள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் மறைவு - 89

பொன்னையும் பிறவற்றையும் அவர்களைப் பாதுகாத்த அந்தணரிடம் ஈந்து, 'இறைவன் திருவருளைத் துணைக்கொண்டு இவர்களுக்குத் தக்க இடத்தில் மணம் முடித்து வைத்துவிடுங்கள். நான் போய் வருகிறேன். இனி என்னைக் காண முடியாது" என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

உலக வாழ்வு அவருக்கு வெறுத்துப் போயிற்று. பாரியோடு மறு உலகத்தில் சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணம் வலியுற்றது. ‘இனி நம்மால் உலகத் தில் ஆகவேண்டிய செயல் ஒன்றும் இல்லை. நாம் பாடிய பாடல்களிலே பாரியும் வாழ்வான்; நாமும் வாழ்வோம். இனி விரதம் இருந்து உயிரை விடுவதே தக்க செயல் என்று எண்ணினர்.

பாரியை நினைத்தபோதெல்லாம் அவருக்குத் துயரம் உண்டாயிற்று. 'குரங்குகள் கீறி உண்ட பழம் நன்ருகக் கனிந்திருப்பது கண்டு, குறவர்கள் அதைப் பறித்து வீட்டுக்குக் கொண்டு வந்து பல நாட்களுக்கு வைத்துக்கொண்டு உண்ணுவார்கள், - உன்னுடைய நாட்டில். அத்தகைய வளமான நாட்டை யுடைய பாரியே, நீ என்ளுேடு மனம் ஒன்றிய நண்பன் என்று நினைத்தேன். ஆனல் அந்த நட்புக்கு ஏற்றபடி நீ நடந்து கொள்ளவில்லை. நீ என்னைப் பாதுகாத்த காலமெல்லாம் உன் மனத்துக்குள் என்னைப்பற்றிய வெறுப்பு இருந்திருக்கவேண்டும். உன்னுடைய பெருமைக்கு ஏற்றவகை நான் இருக்க வில்லை. அதனுல்தான் நீ என்னை இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டாய். உன்னேடு கூட்டிப் போகாமல், இங்கேயே கிட என்று நீ மறைந்தாய். நான் உனக்கு ஏற்ற நண்பன் அல்லாவிட்டாலும், நல்வினையானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/98&oldid=583916" இலிருந்து மீள்விக்கப்பட்டது