பக்கம்:பாரும் போரும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அவனுக்கு இரும்புச்சிலுவை வழங்கியது. அவன் போரில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டான். உடல் நலம் சீர்பட்டு மருத்துவ மனையி லிருந்து அவன் வெளிவருவதற்குமுன் உலகப் போர் முடிவுற்றது. முதல் உலகப் போர் முடிந்ததும்,ஜெர்மனி நூரு யிரம் போர் வீரர்களுக்குமேல் படைவைத்துக்கொள் ளக் கூடாது என்று நேச நாடுகள் ஆணையிட்டிருந் தன. அப்படையிலிருந்த தலைவர்களெல்லாம், சர் வாதிகார ஆட்சியையே பெரிதும் விரும்பினர். சர் வாதிகாரிகளான பிஸ்மார்க், இரண்டாம் வில்லியம் போன்ருர் காலத்தில் ஜெர்மனி ஒரு பெரிய வல்லர சாக விளங்கியதை அவர்கள் எண்ணிப்பார்க்கலாயி னர். இச்சமயத்தை ஹிட்லர் ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட்ான். கேட்போர் உள்ளங் களைத் தன்வயப்படுத்தி, அவர்களே வியப்பிலாழ்த்தும் சொல்லாற்றலே ஹிட்லர் பெற்றிருந்தான். அவன் வாயைத்திறந்தால் சொற்கள் காட்டாற்றின் கடு வேகத்தோடும், வாள் வீச்சைப் போன்ற வலிமையோ ம் வெளிவரும். தான் பேசுவது என்ன என்று சில சமயங்களில் அவனுக்கேகூடப் புரியாமலிருக்குமாம். ஆல்ை தேன் குடத்தை மொய்க்கும் ஈயைப் போல், அவன் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர். தான் நினைப்பதை எல்லா ஜெர்மானிய மக்களும் நினைக்கு மாறு அவன் பேசின்ை. அவன் பேச்சைக் கேட்ட மக்கள் ஆரவாரித்தனர்; அழுதனர்; அவன் நா ஆடியபடியெல்லாம் ஆடினர். “விரைந்து தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/100&oldid=820499" இலிருந்து மீள்விக்கப்பட்டது