பக்கம்:பாரும் போரும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宣U罗 ஜெர்மனி வீழ்ச்சியடைந்ததும் நேசநாட்டினர் தங்கள் முழு வலிமையையும் ஜப்பான நோக்கிச் செலுத்தினர். ப ற க் கு ம் கோட்டைகள் (Super Fortresses) என்று சொல்லப்பட்ட பெரிய போர் விமானங்கள் ஜப்பான் நாட்டின் பெரிய படைத் தளங்களை நிர்மூலமாக்கின. இத்தாக்குதலைவிட ஜப்பான் நாட்டின் தோல் விக்குப் பெரிதும் காரணமாக விளங்கியது அணு குண்டே. நேச நாட்டினரின் பெருமுயற்சியாலும் பெரும் பொருட்செலவாலும் இது கண்டறியப்பட் டது. ஜப்பான் நாட்டின் பெரிய படைத்தளமான இரோசிமாவின் மேல் முதல் அணுகுண்டு போடப் பட்டது. அந்நகரம் இரண்டரை லட்சம் மக்கட் தொகை கொண்டது. ஆல்ை அதில் உயிர் தப்பிய வர்கள் ஆருயிரவரே. அது மட்டுமல்லாமல் அதி லிருந்து தாக்கப்பட்டு, இரத்த வடிகங்கள் அழிக்கப் பெற்றுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகவும் கொடிய நோய்கட்குள்ளாயினர். பிறகு ஜப்பானின் பெரிய கப்பல் தளமான நாகசாகியின் மேல் மற்று மோர் அணுகுண்டு போடப்பட்டது. அந்நகரம் இருந்த இடம் தெரியவில்லை. உடனே ஜப்பான் அடிபணிந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவுற் ԲD35l. இவ்வுலகப் போரில் ஐந்து கோடிக்கு அதிக மான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாட்டிலும் காயமடைந்தனர். இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/109&oldid=820508" இலிருந்து மீள்விக்கப்பட்டது