பக்கம்:பாரும் போரும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வாளையும் முன்னே செல்லவிடுத்து, முரசிற்குப் பூசை செய்து அடித்து முழக்கி, ஊக்கம் வன்மை சூழ்ச்சி முதலியவற்றைக் கைக்கொண்டு படை களுடன் போருக்கு எழுவர்.

அக்காலத்தில் திருமால் 'சோ வென்னும் மதிலே யும் சிவபெருமான் திரிபுரங்களை'யும் அழித்தசெயல் களேயும், முருகவேள் சூரபன்மனை வெல்லக் கருதிக் காந்தளாகிய அடையாளப் பூவைச் சூடியதையும், அரசனுக்கு ஊக்கமுண்டாதற்பொருட்டுச் சிலர் சிறப்பித்துப் பாடிச் செல்வர். அரசன் படைகளுடன் சென்று, மதிலின் வெளிப்புறத்தில் பாசறை அமைத் துத் தங்குவான். வீரர்கள் பகைவருடைய மதிலின் இயல்பையறிந்து கூறுவர்; யானையை ஏவி அதன் கொம்பால் மதிற்கதவைப் பிளக்கச் செய்து மதிலைக் கைக்கொள்வர் ; காவற் காட்டைக் கடந்து நாவாய், தோணி முதலியவற்ருல் அகழியைக்கடந்து போர் செய்வர் ; மதிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள பொறி கள் பல வகையாகத் தம்மை வருத்திலுைம், அஞ் சாமல் அம்மதிலின் மேல் ஏணியைச் சாத்தி ஏறி உள்ளே குதிப்பர். சிலர் அம்மதிலின் உள்ளே இருப் யவருடைய தொகையை அறிந்து கூறுவர்.

விடியற் காலையில் மதிலினுள் உள்ள அரசனது முரசம் அதிர, அதனுற் சினம் கொண்ட வெளியி லுள்ள மன்னன் சமைத்தற்குரிய அகப்பை முதலிய கருவிகளை மதிலினுள் எறிந்துவிட்டு, இன்று மாலேக் குள் இம்மதிலைக் கைக்கொண்டு உட்புகுந்து, பிறகே சமைத்து உண்போம்' என்று வஞ்சினம் கூறுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/29&oldid=595557" இலிருந்து மீள்விக்கப்பட்டது