பக்கம்:பாரும் போரும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

மதிலின் புறத்தே ஓர் அரசன் முற்றுகையிடுதலை அறிந்து, மதிலிலுள்ளவருக்கு நண்பராகிய அரசர், அவ்வேற்றரசைேடு பொருது துரத்த வருதலும் உண்டு. -

மதிலைக் கைக்கொண்ட பிறகு, அரசன் அத னுள் கழுதை ஏரால் உழுவித்துக் கவடியையும் வேலையும் விதைப்பான். பின்பு வீரர் அவனது வாளைப் புனித நீரால் மஞ்சனமாட்டுவர்; மன்னன் மதிலேக் கைக்கொண்ட வெற்றியைப் புகழ்வர்.

பகையரசர் சிலர் பணிந்து திறைகொடுப்ப, எதிர்த்த அரசன் முற்றுகையைக் கைவிடுவான். பகைவர் அடிபணிந்த பின்னும் நீண்ட காலம் இருந்த இருப்பிலே அவன் இருத்தலும், பல அரண் களிலுமுள்ள வேந்தர் யாவரும் அவனுக்கு முன் தம் வலியிழந்து அடிபணிதலும் உண்டு.

தும்பை :

போர்க்களத்தில் மாறுபட்ட இரு மன்னர்களின் படைகள் எதிர்ப்படும்போது அவர்கள் தும்பைப் பூவையேனும் மாலையையேனும் அணிந்திருப்பர். போர் செய்யப் புகுமுன், மன்னர் தம் வீரர்களுக்கு விளைநிலம், பொருள், யானை, குதிரை முதலிய வரி சைகள் வழங்குவர். அப்பொழுது போரில்ை இரு திறத்துச் சேனைகளும் பொருது மடியாமற் காத்தல் அரசனுடைய கடமையென்று சிலர் கூறுவர். சிலர் காலம் கடத்தாமல் போர் செய்வதால் வெற்றியுண் டாகுமென்று மொழிவர். வேறு சிலர் அரசனுடைய படையின் வீரமிகுதியைப் பாராட்டிப் பகைவர் அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/30&oldid=595559" இலிருந்து மீள்விக்கப்பட்டது