பக்கம்:பாரும் போரும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சொல்ல வேண்டும். கனல் கக்கும் இம்மங்கோலிய எரிமலையைக் கண்டு உலகம் எய்திய நடுக்கத்தை வாயில்ை சொல்வதைவிட, மனத்தினுல் எண்ணிப் பார்த்துக் கொள்வதே மேலாகும். இயற்கையே சீறி எழுந்தால் மனிதன் என்ன செய்ய முடியும் ? நிலநடுக்கத்தை எதிர்க்கவோ தடுக்கவோ முடியுமா? அவ்வாறே மங்கோலியப் படையெடுப்பையும் நாம் கருதவேண்டி யிருக்கிறது.

மாங்கோலியர் நாடோடி வாழ்க்கையில் ஊறின வர்கள். அவர்கள் வாழ்க்கையின் அமைப்பு, நுட்ப மும் திட்டமும் வாய்ந்தது. எண்ணிக்கையில் மிகுந் திருந்ததாலேயே அவர்கள் போர்க்களத்தில் பெரு வெற்றியெய்தினர் என்பது பொருந்தாது. அவர்க ளுடைய ஒற்றுமையும் வாழ்க்கை அமைப்புச் சிறப் புமே வெற்றிக்குக் காரணம். எல்லாவற்றிற்கும் மேலாகச் சிறந்த படைத்தலைவர்களையும் அவர்கள் பெற்றிருந்தனர். எனவேதான், ஏறத்தாழ ஆசிய ஐரோப்பாக் கண்டங்கள் முழுவதையும் அவர்கள் வென்று கட்டி யாண்டனர். ஹ9ணர்கள் :

ஹ9ணர்கள் என்னும் கூட்டத்தார் முரட்டுத் தனத்துக்கும் கொடுஞ்செயலுக்கும் பேர்பெற்றவர் கள் என்று முன்பே குறிப்பிட்டோம். இவர்கள் வெண்மையான தோற்றமுடையவர்கள். உரோமப் பேரரசின் அழிவிற்குக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. ஹ9ணர் என்ற சொல் பண்டைய மேல்நாட்டு மக்களால் ஒரு பெரிய வசைமொழியாகக் கருதப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/55&oldid=595609" இலிருந்து மீள்விக்கப்பட்டது