பக்கம்:பாரும் போரும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 செய்து கொண்ட ஒரு செல்வக் கிழவன், தன்னை விரும்பவில்லை என்பதற்காக அவளைக் கொலை செய்தான். இதை உணர்ந்த நெப்போலியன், பல பிரபுக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அவனுக்குக் கொலைத்தண்டனையளித்தான். கொலை யிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதைெடுநேர் "-என்னும் உயர்மொழி, அரசர் கள் கடைப்பிடித்தொழுக வேண்டிய அறநெறி யன்ருே ! நன்றிமறவாத நற்பண்பு அவன் வாழ்வில் தலை யோங்கி நின்றது. அவன் போர்க்களத்தில் மயங்கி வீழ்ந்த பொழுது தனக்கு நீர் கொடுத்துதவிய போர் வீரனுக்கு உயர் பதவி நல்கினன். பாரிசில் வேலையில்லாமல் திரிந்த கா ல த் தி ல் தன்னை ஆதரித்த ஒரு பெண்மணிக்கு, தான் பேரரசனுக விளங்கிய காலத்தில் பெரும் பொருள் நல்கினன். அவன் குடும்பம் வறுமைப் பிணியில் வாடிய காலத் தில் 6,000 பிராங்குகள் கொடுத்துதவிய நண்பன் ஒருவனுக்குப் பிற்காலத்தில் 60,000 பிராங்குகள் கொடுத்ததோடு, அவனைச் சிறந்த அலுவலிலும் அமர்த்தின்ை. நெப்போலியன் சிறந்த படைத்தலைவன் மட்டு மல்லன்; சிறந்த அரசியல் அறிஞனுங்கூட. நாட்டின் முன்னேற்றத்திற்கான அருஞ்செயல்கள் பல ஆற்றி ன்ை. நாற்பதினுயிரம் மைல் நீளமுள்ள பாதைகள் அவன் காலத்தில் போடப்பட்டன. பதின்ைகு பாலங்கள் கட்டப்பட்டன. பல கல்லூரிகளும், தொழிற்சாலைகளும், மருத்துவ மனைகளும் அவளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/86&oldid=820545" இலிருந்து மீள்விக்கப்பட்டது