பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வழக்கமான பாதையிலிருந்து விலகி, அவர் புதிய பாதையில் சென்று முன்னேறினர். அதுவே புரட்சிக் கவிதை புரட்சிக் கருத்துக்கள்! ஒரு முறை படித்தால் அப்படியே மனதில் படிந்து விடும். . "வாழ்கின்ருர் முப்பத்து முக்கோடி என்ருல் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும். பேதம் வளர்க்கப் பெரும் பெரும் புராணங்கள்! சாதிக் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்! இவ்வாறு உண்மை நிலையைக் கூறுகிருர் பாரதிதாசன் மூடப்பழக்க வழக்கங்களை அவர் கண்டித்து பாடியதைப் போல் வேறு எந்தக் கவிஞர் பாடினர்? மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவதென்ருே உயர்வதென்ருே? நானறியேன் கவிஞர்கள் எதிலும் அழகு காண்பார்கள் தாம் கண்ட வற்றைப் பாடுவது இயல்பு. ஆனல், பாரதிதாசனே அழகை மட்டும் காணுமல், அங்கே அவ்ருக்கே உரிய புரட்சிக் கருத்தைச் சீர்திருத்தப் பிரச்சாரத்தைக் கூறத் தயங்க மாட்டார். -

புருவை'ப் பாடும் பாரதிதாசன் என்ன கூறுகிருர் பாருங்கள்:

வட்டமாய்ப் புருக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்துமில்லை; வேறு வேறிருந் தருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண் மூடி வழக்கமில்லை புரட்சிக்கவி' என்ற சிறு காப்பியத்திலே, அழுதவல்லி கூறும் சொற்கள் நாட்டின் உண்மை நிலையை சித்திரித்துக் காட்டுகின்றது. அதாவது உயர் சாதிக்காரர், பணக்காரர்