பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 என்ற பாகுபாடு நம்மை மிரட்டுகின்றது அல்லவா? அை எப்படிக் கண்டிக்கிருர் பாருங்கள். சாதி உயர் வென்றும், தனத்தால் உயர் வென்றும், போதாக் குறைக்கும் பொதுத் தொழிலாளர் சமூகம் மெத்த இழிவென்றும், மிகு பெரும் பாலோரை எல்லாம் கத்தி முனைக் காட்டிக் காலமெல்லாம் ஏய்த்து வரும் பாவி களைத் திருத்தப் பாவலேனே நம் மிருவர் ஆவி களையேனும் அர்ப்பணம் செய்வோம்! காதல் கவிதைகளிலும் காதல் சுவை கனியப் பாடுவ தோடு சீர்திருத்தமான புரட்சி வித்துகளை ஊன்றுகின்ருர். ஒட்டும் இரண்டுள்ளத்தை தம்மில் ஓங்கிய காதலனைப் பிட்டுப் பிட்டுப் புகன்ருர் அதைப் பெற்றவர் கேட்கவில்லை. குட்டை மனத்தாலே-அதை கோபப் பெருக்காலே - வெட்டிப் பிரிக்க வந்தார்-அந்த வீணையை நாதத்தினை! உண்மைக் காதலுக்குத் தடை ஏற்படுமானல், அந்தத் தோல்வி யாருக்கு? உலகத்துக்கத்தான் அது தோல்வி என்று கூறுகிரு.ர். இன்று தொட்டுப் புவியே-இரண் டெண்ணம் ஒருமித்த பின் கின்று தடை புரிந்தால்-நீ நிச்சயம் தோல்வி கொள்வாய்! இவ்வாறு பாரதிதாசன் தம்முடைய புரட்சிக் கருத்துக்களை ஒவ்வொரு துறையிலும் விதைத்திருக்கிரு.ர். தொழிலாளர் நலன், கைம்மைக் கொடுமை மூடத் திருமணம், தமிழ்ப்பேறு, தமிழ் வளர்ச்சி இப்படி அவருடைய கவிதை உலகில், புரட்சிக் கொடி வானளாவிப் பறக்கின்ற சிறப்பைக் கண்டு களிக்கின்றேன்.