பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வண்ண எழிலும் வழவழப்பும் கொண்டதுவாய் கண்ணுக் கழகாய்க் கலைப்படைப்பாய் ஓர் அழைப்பை கோத்துப் படியெடுத்துக் கூர்மையுடன் வாசித்துப் பார்த்துத் திருத்திப் பதிப்பித்த பின்னலே பச்சைக் குழந்தை பழபழக்கும் தேன்முகத்தில் மச்சமிட்டு வைத்து மருவாக்கும் தன்மையென அச்சுப் பிழைதோன்றி கம்மை அசடாக்கிக் கொச்சைச் சிரிப்பால் குறும்பு முகங்காட்டும் காலைமணி பத்து கருத்துான்றிப் பார்த்ததுதான் கோலக் கலைமணிபத் தாய்க்குறுகிக் காட்சிதரும் மூன்று முறைவாங்கி முப்பத்து மூன்றுமுறை தானே படித்துத் தலைப்பில் அடிப்பாணக் கையெழுத்துப் போட்டவரே காட்ட முகத்தோடு ஐயா பிழையாய் அடித்தீர் எனக் குதிப்பார். வாளின்றி வேலின்றி வாழ்க்கைக் களத்தினிலே நாளும் பிழைகள் அறப்போர் நடத்திவரும் அச்சகத்தான் என்னை அழைத்துக் கவியரங்கம் இச்சகத்தில் சற்றே இணைந்திடலாம் வாவென்ருர் எழுத்திற் சுவைகூட்டும் ஏந்தலினைப் பாடுதற்கே எழுத்தி ற் பொருள் கூட்டும் எம்தோழா வாவென்ருர் மூடத் தனத்தைத் தீதென்றல் முட்டவரும் - மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்ட வந்த ஈடற்ற தோளானை என்னுசான் பாவேங்தைப் பாடற்றேர் ஏற்றிப் பவனிவரச் செய்கின்ற இந்த அரங்கில் எனக்குமொரு பங்களிக்கச் சிந்தை கொண்ட அன்பர்க்கு நன்றி செலுத்துகின்றேன்