பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காட்டுச் சிறுவர்க்கு நச்செண்ணம் சேர்க்குமென வாட்ட முற்று நல்ல வழிகாட்ட எண்ணி இளைஞர் இலக்கியத்தை ஏட்டில் எழுதி எளிமைக் இலக்கியம் ஈதெனக் காட்டிஞர். செந்தமிழ் நாட்டுச் சிறுமி படித்தேளும் செந்தமிழ் தன்னைப் படித்தேன், எனுமொழியும் சிங்கப் பிடரைச் சிலிர்த்து விடுதல் போல் தங்கக் கதிரவன் வருதலைச் சாற்றலும் கண்ணிர்க் குளத்தினைப் பாடிச் சிறுவர்க்கு வண்ணத் தமிழை வழங்கும் சிறப்பையும் குருமார் கொடிமைக் கொதிப்பை மறந்து பெருமாள் மாட்டினைப் பாடிச் சிறுவர்தம் அன்புக் குரியதாய் ஆகிய பாவேந்தர் இன்னும் தூக்கமா பாப்பா எழுகெனக் கூவி யழைத்துக் குயிலும் மயிலும் தாவித் திரியும் குரங்கும் குதிரையும் யானையும் பாம்பும் அணிலும் குருவியும் தேனெனச் செந்தமிழ்ப்பாட்டில் வடித்திங்கு நாட்டுச் சிறுவரை நல்ல குடிகளாய் மாற்றும் பொறுப்பை மகிழ்ந்தேற்ருர் கண்டீரே. பாவேந்தர் எண்ணம் பலிக்கத் தொடர்ந்திங்கே நாமேந்து வோம் நற் பணி. 灘