பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 என்று. அந்தக் குரல், காற்றில் மிதந்து வரும் கீதமாக மட்டும் இன்றி கிண்கிணிச் சத்தத்தோடு இழைந்து வரும் கீத மொழியாக மட்டுமின்றி, கேட்போரின் வளைந்த முதுகை நிமிர்த்தி விடும் வீரக் குரலாகி விட்டது! எனவே தான் நமக்கொரு வால்டேர் கிடைத்துவிட்டார். நமக்கோர் ஷெல்லி கிடைத்து விட்டார். நமக்கு ஒரு கவிஞர் கிடைத்து விட்டார். அவர் நம்மோடு இருக்கிரு.ர். நமக்காக இருக்கிருர். நம் வேலையைச் செய்கிருர், நாம், வாழ வழி அமைக்கிரு.ர். அவர் வாழ்க, அவர் திறன் ஒங்குக! அவர் வெல்க! அவர் வெற்றியில்ை நமக்கு வெற்றி. ஓங்குக! என்று மனமார நாம் கூறுகிருேம். நாம் மட்டுமா, நாடும் கூறுகிறது. நாட்டு மக்களுடைய இந்த மகிழ்ச்சியின் ஒரு சிறு அறிகுறியே இதுபோது கவிஞருக்கு அளிக்கப்படும் பொற்கிழி. இதிலே குவிந்துள்ள ஒவ்வொரு காசும் பேசக் கூடுமானுல் மணிக்கணக்கில் பேசும் கவிஞரின் பெருமையை, அதனல் சமுதாயம் பெற்ற பெருமையை பொற்காசுகள் பேசினலும்கூட புரட்சிக் கவிஞரின் செவியில் அந்த ஒலி புகாது-எப்படிப் புகும்? அவருடைய செவியிலே ஆலைச் சங்கு, சுண்ணம் இடிக்கும் சுந்தரியின் பெருமூச்சு, பாட்டாளியின் குமுறல், பணமெனும் கொடி கட்டிய படகு வருமா என்று எதிர்பார்த்து ஏங்கும் ஏழையின் ஏக்க மொழி, எழில் ததும்ப இளமை ததும்ப உள்ள மங்கை மஞ்சத்தில் குறட்டை விடும் இளம் மணுளனைக் கண்டு கண்ணிர் விட்டுக் கதறும் ஒலி இவை புகுந்து, கண்களிலே அனலையும் புனலையும் கிளப்பிவிட, ஏடா தம்பி! எடுடா பேன! கொண்டு வா மைக்கூடு, இந்தக் கொடுமைகளைக் களைந்தேயாக வேண்டும்; இன்றே களைந்தாக வேண்டும்.' என்று முழக்கமிடுகிருர். அந்த முழக்கம் இந்நாளில் நாம் பெற்ற கருவூலம்! அவர் நமக்கு அளியாத செல்வம்; அவர் வாழ்க! வெல்க’