பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அண்ணு நடத்திய திராவிடர் இசை விழா! புரட்சிக் கவிஞர் அவர்களுடைய விழாவிலே ஒரு பெரும் சிறப்பாக பேராசிரியர் இராமனுதன் அவர் களுக்கும், நாமக்கல் செல்லப்பனர் அவர்களுக்கும், முல்லை முத்தையா அவர்களுக்கும் சிறப்பும்-பாராட்டும் இங்கே செய்யப்பட்டு இருக்கின்றது. நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்பொழுது முல்லை முத்தையா அவர்கள் இப்பொழுது எப்படி இருப்பார் என் கின்ற அவாவுடன் வந்தேன். காரணம், 38 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணு அவர்கள் திரா விடர் இசை விழா என்ற ஒரு விழாவை நடத்தியபொழுது டி. என். இராஜரத்தினம் அவர்களுடைய நாயன் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது அந்த இசை விழாப் பந்தலின் ஒரு மூலையில் ஒரு துண்டை விரித்துப் போட்டு, அதிலே அண்ணு அவர்களும், நானும், முல்லைமுத்தையா அவர்களும் அமர்ந்து அந்த இசை நிகழ்ச்சியைக் கேட்டோம். அப்பொழுது முல்லை முத்தையாஅவர்கள் பார்ப்பதற்கு மிக வசீகரமானத் தோற்றத்தோடு-காண்போரைக் கவர் கின்ற தோற்றத்தோடு வாலிப மிடுக்கோடு அன்றைக்குத் திகழ்ந்தவர். அவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிருேம் என்கின்ற ஆவலோடு இங்கே வந்தேன். அவருடைய தோற்றம் 38 ஆண்டு இடைவெளியை எனக்கு நினே ஆட்டியது! எனினும் அவர் பேரறிஞர் அண்ணு அவர்களிடத்திலும், பெரியார் அவர்களிடத்திலும், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களிடத்திலும் கொண்டிருந்த அன்பும், இன்னமும் கொண்டிருக்கின்ற கொள்கைப் பிடிப்பும் என்ன வியப்பிலே ஆழ்த்திக் கொண்டேயிருக்கின்றது? அப் படிப்பட்ட நண்பரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித் ததில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.