பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 துண்டு, மாணவ பருவத்திலே, திருவாரூரிலே தமிழ் நாடு தமிழ் மாணவர் மன்றம், என்ற ஒன்றினை நான் தொடங் கிய போது அதற்கு வாழ்த்து அனுப்புங்கள் என்று நான் புதுவையிலே இருந்த புரட்சிக் கவிஞருக்கு மடல் தீட்டிய போது, அவர் தயங்காமல் வாழ்த்துக் கவிதையொன்றை அனுப்பி வைத்தார்கள். அந்த வாழ்த்துக் கவிதையிலே தான் "தண்பொழிலில் குயில்பாடும் திருவாரூரில் தமிழ்நாடு தமிழ்மாணவர் மன்றம் காண் வன்மையொடும் உண்மையொடும் வாழ்க்திடுங்காண்' என்று அந்தக் கவிதையை தொடங்கி கிளம்பிற்றுகாண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் கிழித்தெறியத் தேடுதுகாண்பகைக் கூட்டத்தை வளம்பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் - வால் நீட்டினல் உதைதான் கிடைத்திடுங்காண்" என்று எழுதினர், ! புரட்சிக் கவிஞரே உதைதான் கிடைத்திடுங்காண்” என்று எழுதிய பிறகு நாம் ஏன் இன்ைெரு எட்டடி பாயக் கூடாது என்று எண்ணிட் குடியரசு போன்ற கவிஞர் களுக்குத் தோன்றும். புரட்சிக் கவிஞர் பூகம்பமாக இருந்தால் குடியரசு போன்றவர்கள் எரிமலையாக ஆவதிலே எனக்கு மறுப்பு இல்லை. ஆனால், அதே நேரத்திலே ஆவேசத்திற்கும்' ஆபாசத்திற்கும் இடையிலே உள்ள முரண்பாட்டை தயவு செய்து நம்முடைய கவிஞர் பெருமக்கள்-எழுத்தாளர்கள். பேச்சாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென்று புரட்சிக் கவிஞருடைய இந்த விழாவில் நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன். புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களு. டைய கொள்கைகளே பேரறிஞர் அண்ணு. அவர்களுடைய எண்ணங்களை கவிதை வடிவிலே நாட்டிற்குத் தந்தவர்கள்