பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இந்த விஷயத்தைப் பற்றி எழுது என்று கவிஞனி டம் ஒப்பந்தம் பேசுவது நடக்காத காரியம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் புற்றி இன்னெருவர். சொல்வி, கவி எழுத முடியாது. ஒரு கொடுமையை அல்லது ஒரு காட்சி, யைக் கண்ட அளவில் உணர்ச்சி தூண்டக் கவி எழுத, வேண்டும்.

என் இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான்! தமிழ்படி: தமிழ் பேசு, தமிழ் எழுது. கொடுமை கண்டவிடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே. அச்சமின்மையை வளர். புரட்சி மனப்பான்மை என்னுள் புகுந்த பொழுது எனக்கு எவ்வளவோ எதிர்ப்பு கள் ஏற்பட்டன. நான் அவைகளைக் கண்டு அஞ்சவில்லை. ஏனெனில் எதிர்ப்பிலிருந்து நன்மை பிறக்கிறது, அறிவு, வளர்கிறது. பாரதியார் அச்சம் தவிர்". என்றும் போர் முனை விரும்பு' என்றும்தான் கூறியிருக்கிருர் தமிழ் வாழ்க!