பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உரையாடிச் செல்வதை நான் பல முறை கண்டிருக்கிறேன். முல்லைப் பதிப்பகம் புத்தக விற்பனை நிலையமாகக் காணப்படாமல், இலக்கிய மண்டபமாகவும், தமிழ் அறிஞர்மன்றமாகவும் காட்சி தரும். அறிஞர் அண்ணு அவர்களும் முல்லைப் பதிப்பகத் துக்கு அடிக்கடி வருவார்கள். அவர்களைக் காணவும் நண்பர்கள் வருவார்கள். பிற்காலத்தில் பொதுவுடைமைக் கவிஞராகத் திகழ்ந்த தமிழ்ஒளி புதுவையில் பாவேந்தர் இல்ல்த்தில் இருந்து பின்னர் முல்லைப் பதிப்பகத் துக்கு வந்து சில மாதங்கள் இருந்தார். அவரைக் கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் கவிஞர்.

  • நம்முடைய இயக்கத்துக்கு, முல்லைப்பதிப்பகம் ஒரு பாசறையாக விளங்கியது' என நடிகமணி டி. வி. நாராயணசாமி அவர்கள் அடிக்கடி கூறு வார்கள்.

முதல்வர் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அவர்கள், அண்ணு அவர்களைக் காண முல்லைப் பதிப்பகத்துக்கு வந்ததையும் நான் பார்த் திருக்கின்றேன். பதிப்பாளர்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் உள்ள ராயல்டி", முழு உரிமை போன்ற நிலைமை இல்லாமல், கவிஞருக்கும் முல்லைப்பதிப்பகத் துக்கும் நெருங்கிய நேசப் பிணைப்பு நிலவியது. கவிஞருக்குத் தேவையான போதெல்லாம் முத்தையா பணம் கொடுத்துக் கொண்டிருப்பார்.