பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{口 35 கவிஞருக்கு புதுவையில் சொந்த வீடு இல்ல்ை என்ற குறை இருந்தது. அவர்கள் குடி இருந்த வீட்டை விற்பதற்கு வீட்டின் உரிமையாளர் எண்ணினர். முத்தையாவும் அதை உணர்ந்தார் அடுத்து சில நாட்களில், தாங்கள் இப்பொழுதும் வசித்துக் கொண்டிருக்கும் வீட்டையோ அல்லது வேறு ஒரு வீட்டையோ வில்ை பேசி தீர்மானி யுங்கள். அதை வாங்கி விடலாம்' என்று உற்சாகமாவும், பரந்த மனப்பான்மையோடும் கவிஞரிடம் முத்தையா கூறினர். கவிஞரின் மகிழ்ச் சிக்கு எல்லையே இல்லை. ஒரு வாரத்தில் தோழர்கள் திருநாவுக்கரசு செட்டியாரும், முத்தையாவும் புதுவை சென்று கவிஞரிடம் ஒரு தொகை கொடுத்து இப்பொழுது, கவிஞரின் நினைவு-நூலகமாகத் திகழ்கின்ற அந்த பெருமாள் கோவில் தெரு வீட்டை விலைக்கு வாங்கப் பெற்றது. - கவிஞர் நன்றிப் பெருக்கோடு அக மகிழ்ந்து, தாமே வலிந்து ஒன்பது நூல்களே முல்லைப் பதிப்பத்கதுக்கு முழு உரிமை எழுதிக் கொடுத்து தம் கடமையை நிறைவேற்றினர். திருச்சி பழநியப்பா பிரதர்ஸ் என்னும் புத்தக நிலையத்தில் அப்பொழுது அலுவலில் இருந்த செல்லப்பாவும் முல்லைப் பதிப்பகம் முத்தையாவும் நெருங்கிய நண்பர்களா யிருந்தனர். தனக்குச் சொந்தமாக ஏதேனும் தொழில் நடத்த வேண்டும். என்ற எண்ணத்தை முத்தையாவிடம் செல்லப்பா கூறினர். அடுத்து சில மாதங்களில், செல்லப்பாவை சென் னைக்கு அழைத்து வந்து, முல்லைப் பதிப்பகத்துக்கு அடுத்த அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து,