பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாரி நிலையம் என்ற பெயரைச் சூட்டி, முல்லைப் பதிப்பக வெளியீடுகளுக்கு விற்பனையாளராக அமைத்து உதவினர் தோழர் முத்தையா. இலக்கிய மாத இதழ் இல்லாத குறையை முல்லை’ நிறைவு செய்தது. 1946ல் முல்லை மாத இதழை தாமே சொந்த மாகத் தொடங்கினர் முல்லே முத்தையா. திரு. வி. க., கா. நமச்சியவாயர், தண்டபாணி தேசிகர், சோமசுந்தர பாரதியார் முதலான அறிஞர்களின் தரமான கட்டுரைகளைத் தாங்கி முல்லே முறுவலிக்கும். கவிஞரிடம் முத்தையாவுக்குள்ள பற்றுதல் காரண மாக, முல்லை யில் ஆதரவாளர் கவியரசர் பாரதிதாசன்' எனக் குறிப்பிட்டு, ஒவ்வொரு இதழிலும் கவிஞரின் கவிதை, கவிஞரைப் பற்றிய சுவையான நிகழ்ச்சியையும் இடம் பெறச் செய்தார்.

முல்லை'யின் முதல் இதழைக் கண்ட தமிழ்ப் பெரி யார் திரு. வி. க. அவர்கள், முல்லை வரப்பெற் றேன். அதில் முல்லை நகைபுரிதல்கண்டேன். முல்லை. யின் முயற்சியால் நம் தாய் அரியாசனம் ஏறு வாள்' என்று பாராட்டுத் தெரிவித்தார்.

முல்லை'க்கு தரமான வாசகர்களின் வரவேற்புக் கிடைத்தது. காந்தியடிகளின் எழுபதாம் ஆண்டு நிறைவுக்காக, டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் (இந்தியக் குடியரசின் முன்னுள் தலைவர்) காந்தி யடிகளைப்பற்றி, உலக அறிஞர்களின் கட்டுரைகளை யும் கருத்துரைகளையும் தொகுத்து 1939ல் பெரிய நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.