பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஏப்ரல் 21ம் நாள் கவிஞர் மரணம் அடைந்தார். பாடிப் பறந்த குயில் மறைந்தது. தமிழுக்கு பெரிய இழப்பு: தமிழர்கள் துக்கம் அடைந்தனர். மறுநாள் கவிஞரின் உடல் புதுவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதுவைக் கடற்கரையில் அடக்கம் செய்யப் பெற்றது. ുഖ് நகராட்சி 1965ல் கவிஞர் நினைவு மண்டபத்தை எழுப்பியது. 1968 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல் அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணு அவர்களின் முயற்சியால் சென்னைக் கடற்கரையில் கவிஞரின் முழு உருவச்சிலே நிறுவப்பெற்றது. புதுடில்லி, மத்திய அரசின் சாகித்திய அகாடமி யினுல் 1969ல் கவிஞர் இயற்றிய பிசிராந்தையார்’ என்ற நாடக நூலுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு வழங்கப் பெற்றது. புதுவை அரசு 1971 ஏப்ரல் மாதம் 29ம் நாள் கவிஞரின் பிறந்த நாளை அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடியது. புதுவை, பெருமாள் கோவில் தெருவில் இருந்த கவிஞரின் இல்லத்தைப் புதுவை அரசு விலக்கு வாங்கி, கவிஞரின் குடும்பத்தாருக்கு உதவி புரிந்து, அந்த இல்லத்தைக் கவிஞரின் நினைவு நூலகமாகவும் காட்சிக் கூடமாகவும் ஆக்கியது. தமிழக அரசு 1975ல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் கவிஞரின் முழு உருவ வண்ணப் படத்தைத் திற்ந்து வைத்தது.