பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஒரு சிலரின் தலையீட்டினல், நிதிக்குழு காஞ்சிக்கு மாற்றப்பட்டது. சென்னை பச்சையப்பர் விளையாட்டுத் திடலில், 29-6-1946 ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கவிஞருக்குப் பொன்னடை போர்த்தி, 25,000 ரூபாய் நிதி அளித்து, சிறப்பிக்கப் பெற்றது. அறிஞர் அண்ணு அவர்கள் முன் நின்று, சிறப்பாகச் செய்தது, குறிப்பிடத்தக்கது. புதுவை அரசு பள்ளியில் முப்பத்தாறு ஆண்டுகள் பணி புரிந்த கவிஞர், 1946ல் ஒய்வு பெற்ருர். திருச்சியில் 1950ல் கவிஞருக்கு மணிவிழா கொண்டாடி, பொன்னடை போர்த்தி, சிறிதளவு நிதியும் அளிக்கப் பெற்றது. புதுவை சட்டமன்றத் தேர்தலில், 1954ல் கவிஞர் தேர்ந்தெடுக்கப் பெற்று, சட்டமன்றத்தின் முதல் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். 1961ல், சிலருடைய கூட்டுறவில், கவிஞரின் :பாண்டியன் பரிசைத் திரைப்படமாகத் தயாரிப் பதற்காக, கவிஞர் சென்னையில் தங்கலானர். சிவாஜி கணேசன் முதலில் நடிப்பதாக ஒப்புக் கொண்டவர் பின்னர், மறுத்து விட்டாராம். ஒரளவு நஷ்டத்தோடு அந்த முயற்சி கைவிடப் பட்டது. 1963ல் பாரதியார் வரலாற்றைத் திரைப்பட மாகத் தயாரிக்க கவிஞர் முயன்ருர். கவிஞரே அதில் நடிப்பதாக அறிவித்து இருந்தார். பிறகு அம்முயற்சி கைவிடப்பட்டது. 1964ல் ஏப்ரல் மாதம் கவிஞருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.