பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 விழா முத்திரை பதித்த விழாவாக நிறை வேறியது. ஏப்ரல் 30-ம் நாள் காலை 9 மணிக்கு பாரதி தாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பத்தாயிரம் மரங்கள் நடு விழா தொடங்கியது. நாகலிங்க மரம் ஒன்றை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நட்டார்கள். அதன்பின், மாணவ மாண்வியர் மரம் நடுவதை, திறந்த ஜீப்பில் சென்றவாறு பார்வை யிட்டார். மரம் நடு விழாவில் பங்கு கொண்டவர்களையும், கலந்து கொண்டவர்களையும் மாண்புமிகு செய்தி, அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம. வீரப்பன் அவர்கள் வரவேற்றுப் பேசினர். பின்னர், மாண்புமிகு முதல்வர் அவர்கள் மரம் நடுவதன் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினர். கருத்தரங்கிறகு மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு. ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமை யேற்று உரை நிகழ்த்தினர். அண்ஞ்மலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. எஸ். வி. சிட்டிபாபு, அண்ணு தொழில் நுட்பப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. வ. செ. குழந்தைசாமி, காந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் மு. அறம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. வ. சுப. மாணிக்கம், கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. அ. வெங்கட் ராமன், தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. வி. ஐ. சுப்பிரமணியும் ஆகியோர் முறையே, பாரதி-பாரதிதாசன் கண்ட சமூக மறுமலர்ச்சி,