பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv இன்று பாவேந்தர் அவர்களைப் பற்றி அறிஞர்கள், ! கவிஞர்கள், தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களையும் பாவேந்தரைப் பற்றிய செய்திகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். * . . நண்பர் முல்லை முத்தையா அவர்களின் பார் புகழும் பாவேந்தர்’ என்னும் இத் தொகுப்பு நூலினை கான் பலமுறை படித்துப் பார்த்தேன். தேர்ந்தெடுத்து வழங்கியுள்ள கருத்துரைகள், செய்திகள் சிறப்பாக உள்ளன. தன்னைப் பற்றியே சொல்லிக் கொள்வோரும், தன்னைப் பற்றிப் பலரைச் சொல்லச் சொல்லி மகிழ் வோரும் மிகுந்திருக்கும் இக்காலத்தில் மற்றவர்களைப் பற்றிக் கூறிய கருத்துரைகளைத் தொகுத்து வெளியிடு வதென்பது பெருந்தன்மையான செயலாகும். பாவேந்தர் பற்றி ஆய்வு செய்வோருக்கும், கவிஞர்கட்கும், பகுத்தறிவாளர்கட்கும் இத்தொகுப்பு நூல் மிகவும் பயன்படும். பயன்படக் கூடிய பணியைச் செய்துவரும் முல்லை முத்தையா அவர்களே வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். 忍9-5-夏93尖 அன்புடன், சுரதா