பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றும் இன்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் திரும்பிப் பார்க்கின்றேன். அப்பொழுது தேசிக விநாயகம் பிள்ளே நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன், ச.து.சு. யோகியார் ஆகிய நான்கு கவிஞர்களே இருந்தனர். அவர்களுள் பாரதிதாசனத் தவிர, ஏனேய மூவரும் பழைய தடத்திலே பாட்டு, எழுதினர்கள். பாரதிதாசன் மட்டும் எதிர் அணியில் நின்று, மூடப்பழக்கத்தைச் சாடினர். காதலைக் கனிவோடு, சுவையோடு பழகு தமிழில் பாடி மகிழ்வித்தார். பழமை விரும்பிகள் அவரை ஏசினர்; எதிர்த் தனர்; வெறுப்போடு பார்த்தனர். அப்பொழுது நான் இருபத்து நான்கு வயதுடைய இளைஞன். என் மனம் வெதும்பியது. ஆயினும், நான் தளர. வில்லை. துணிந்து பாரதித்ாசன் நூல்களை வெளி யிட்டு வந்தேன். - காலம் மாறியது; எதிர்த்தவர்கள் சிலர் மனம் மாறினர்; சிலர் மாய்ந்துவிட்டனர். பாரதிதாசன் பரம்பரை என ஒரு படையே திரண்டு விட்டது. பாவேந்தர் பாடல்களைச் சுவைத்து சுவைத்து உள்ளம் பூரிக்கின்றனர். ஊர் தோறும் பாவேந்தர் விழா. கல்லூரிகளில் எல்லாம் விழா. அரசு ஆண்டு தோறும் விழாக் கொண்டாடுகிறது. பாவேந்தர் சிலையைக் காண்கின்ருேம்.