பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பொதுவுடைமை என்ற கருத்து தமிழ் இலக்கிய உலகுக்குப் புதுமையான ஒன்று. இந்தப் புதிய கருத்தை அறிவியல் நோக்கில் முறையாகப் பல கோணங்களில் இலக்கிய நலம் செறியப் பாடிய சிறப்பு மிக்க ஒரே கவிஞர் புரட்சிக் கவிஞர்தான். . மனிதன் அனுபவிக்கும் எந்தப் பொருளுக்கும் நாம் கொடுக்கும் விலை மனித உழைப்புக்குத்தான் என்பதை அறிய வேண்டும். உண்மையில் உழைப்பவனுக்குத்தான் உழைப்பின் பயனகிய ஊதியம் போய்ச் சேர வேண்டும். உலக நடை முறையில் அவ்வாறு இல்லாமல் உமைப்பவன் பசியால் வாடுகின்ருன். உழைக்காதவன் வளமாக உண்டு உடுத்து வாழ் கின்றன். இந்த நில நாட்டு நடை முறையாக வந்தால் இதனை மாற்றி எல்லோரும் உழைக்க வேண்டும் என்பதும், அவ்வாறு உழைப்பவருக்கு எல்லா வகையான வாய்ப்புக் களும், நலங்களும் ஒத்த அளவில் கிடைக்க வேண்டும் என்பதும், குறிக்கோளாக வைத்து உருவாக்கப்பட்டது தான் பொதுவுடமைக் கொள்கை. ஆகவே, பொதுவுடமை என்று சொல்லும் போது தொழிலாளர்-தொழிலாளர் நிலை முதலாளிகள்-ஆளுவோர் இவர்களின் அடா போக்கு இவையெல்லாவற்றையும் திறம் பட, உள் ளது உள்ளபடியே பாடுவதன் வாயிலாக பொதுவுடைம என்ற குறிக்கோளை நோக்கி உலகைச் செல்லத் துண்டுவதும் பொதுவுடமையைப் பாடியதாக அமையும். இதுதான் அறிவியலோடு பொதுவுடமைக் கொள்கை அணுகும் முறையாகும். புரட்சிக் கவிஞர் நேர்முகமாகவும் பொதுவுடைமை யைப் பாடியுள்ளார்.