பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 6r Gör வர்ணிக்கப்படும் அழகுத் தெய்வத்தின் பாதாதி கேசம் இப்பாடல் தொகுதி என்று சொன்னல் முழுதும் பொருந்தும்...... - ஒரே நிலையில், ஒரே அமைதியுடன், கவித்துவ சக்தி தள்ளாடாமல் செல்லும் பாட்டுத் தொகுதி இந்த அழகின் சிரிப்பு: இந்தத் தொகுதியில் தாசன் ஒரு புதிய சம்பிர தாயத்தைப் புகுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது வாக இது வரை பாடல்களில், பெண்கள் அல்லது அரசர்கள் ஆகியோருக்கே உலகின் அழகுச் சுமைகளை யெல்லாம் காணிக்கையாக வைத்து வழுத்துவது மரபு. இங்கு இவர், தம் கற்றுச் சொல்லியிடம் உலகின் அழகுகளை எடுத்துக் காட்டி வருவது போலவே பாடல்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதுவரை இல்லாத புது சம்பிரதாயம் இது.