பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புரட்சிக் கவிஞர் பாவேந்தரைப் பற்றி முதன் முதலில் வெளியிடப் பெற்ற நூலின் நான்காம் பதிப்பிற்கான பதிப்புரை. 2 தமிழ் இலக்கிய உலகில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றி அறியாதவர் இரார். படிப்போர் சிந்தனைக்கு வேலை தந்து, புதிய கருத்துகளையும் புரட்சிக் கருத்துக்களையும் தம் கவிதைகள் மூலம், அதன் காரண மாகப் பாரதிதாசன் பரம்பரை என ஒரு பரம்பரையும் தோற்றுவித்த பெருமைக்குரியவர் பாரதிதாசன். அவ்ர் களாவார்.: - பாரதிதாசன், கவிதைகளையும், அவர் தம் வரலாற்றினை யும் மக்கள் அறியாதிருந்த காலத்தில், அவற்றை மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந் நூலின் தொகுப்பாசிரியர், முல்லை முத்தையா எனச் சிறப்பு பெயரால் அழைக்கப் பெறும் திரு. ப. முத்தையா அவர் களையே சேரும், - இத் தொகுப்பில் பாரதிதாசனைப் பற்றிப் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர் பெருமக்களின் கருத்துரைகள் நன்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைப் படிப் போர் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை மேலும் பயிலும் ஆர்வம் பெறுவர் என்பது திண்ணம். . திரு. முத்தையா அவர்களின் அரிய முயற்சியால் 1946இல் சென்னைக் கமலா பிரசுராலயத்தாரால் இதன் முதற் பதிப்பு வெளிக் கொணரப்பட்டது. அடுத்து முறையே 1948, 53,ஆம் ஆண்டுகளில் இரண்டு பதிப்புகள் வெளி வந்தன. இந் நான்காம் பதிப்பு கழக வெளியீடாக வெளி வருகின்றது. தமிழ் அன்பர்கள் இதனை ஏற்றுப் போற்று வார்கள் என்று நம்புகிருேம். - -சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தார்