பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பார்ந்த அய்யாமுத்து அவர்கட்கு. நலம். அன்பு கனிந்த தந்தி கிடைத்தது. திரு. ப ன் .ெ மா ழி ப் புலவர் தேவநேயப் பாவாணருக்கும் ஆ சி ரி ய ர் பொன்னம்பலஞர்க்கும் மணியார்டர் அனுப்பியுள்ளேன். உங்கட்கு மணியார்டர் னுேப்பவில்லை. அனுப்பினுல் நீங்கள் வருந்துவீர்கள் என்று. உங்கள் மகள்-என் மகள் சரசுவதி சொன்னுள். - வரவும் போகவும் ஆகும் செலவுக்கு நான் பொறுப்பாளி. ஆனதால் அன்புள்ளவரே, ஒரு நாள் முன்னதாகவே புதுவைக்குக் கட்டாயமாக வந்துவிட வேண்டும், பல சங்கதிகளை உத்தேசித்து இதைச் சொல்லு கிறேன். உங்கள் மனைவியார்.என் தங்கையாரையும் அழைத்து வர வேண்டும். இந்த விஷயத்தில் தயவு செய்து அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளமாட்டீர்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உடனே அப்படியே ஆகட்டும் என்று தந்தி கொடுக்கவும். * . தங்கள் கீழ்ப்படிதலுள்ள, பாரதிதாசன் I 8-6-55.