பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் உயர்ந்தவரா? பாரதிதாசன் உயர்ந் தவரா? என்றெல்லாம் கூட இப்பொழுது பட்டிமன்றம் நடக்கிறது. பாரதிதாசனை உயர்த்திக் காட்டுவதற்காகப் பாரதியாரைச் சிலர் குள்ளமாக்குகிருர்கள். நாம் போற்றுகிற பாரதிதாசனே நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா என்று பாரதியாரைக் குறிப்பிட் டிருக்கிரு.ர். இது தெரியாதா என்றும் பெரியவர்கள் சிலர் கேட்பார்கள். இது மாதிரி வரிகளை நமது வசதிக்காக நினைத்துக் கொள்கிருேம். தேவைப் படுகிற போது மறந்து விடுகிருேம். 1974 ஆகஸ்டில் பாண்டிச்சேரியில் அப்போது வருவ தாக இருந்த (இப்போதும் வந்து சேராத பல்கலைக் கழகத் திற்குப் பாரதிதாசன் பல்கலைக் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று நானும் குரல் கொடுத்தேன். உமா சங்கர் ஜோஷி போன்ற அறிவாளர்களே கூட அப்போதைக்கு அதை எதிர்த்தார்கள். இருந்தாலும் கால தேவனின் கட்டளை புரட்சித் தலைவருக்கே அந்த வரலாற்று வாய்ப்பும் வந்து சேர்ந்திருக்கிறது. நினைவில் நிற்கிற நாளந்தா பல்கலைக் கழகத்தைப் போல, பாரதிதாசன் பல்கலைக் கழகம் நெஞ்சில் நிறைந்திட நினைத்ததை முடிப்பவரை வணங்கி வாழ்த்துகிருேம்.