பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 பதை வானம் உலக மக்கட்கு எழுதிக் காட்டுவது போல அக்காட்சி இருக்கிறதாம். இவ்வாறு தத்துவம் கூறும் கவிஞர், வானவில் தோன்றுகின்ற அந்த வாகனப் போல மனுேபாவம் கவிஞர்களுக்கு இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடுகிரு.ர். "புதுமை இது வானிடைக் கண்ட அவ் வோவியம் போய்முகிற் புனலிலே நொடிதோறும் கரைந்ததே! இது அது எனச் சொல்ல ஏலாது ஒழிந்ததே! - இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம் . கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும் என்பதைக் கண்ணெதிர்க் காட்டவரும் விண்ணெழுது கவிதையாம் அது நமக்குத் தெரியும் அன்றியும் கவிஞருளம் அவ்வான விரிவினும் பெரிதென்ப தறிவமே' கவிஞருள்ளம் வானவிரிவினும் பெரியது. குறுந்தொகை, காதலன்பு. - . நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்ததன்று நீரினும் ஆரளவின்றே......' எனக் குறிப்பிடும். அது போலவே கவிஞருள்ளமும் நிலத் தினும் பரந்தது. வானினும் உயர்ந்தது. கடலினும் ஆழ மானது எனக் கூறலாம். பரந்த உள்ளத்தில் உலகப்பரப்பு முழுதும் பற்றிய சிந்தனே முகிழ்ப்பது இயல்பே யன்றோ? ஒரு மனிதன் தேவைக்கே இவ்வுலகம்' என்ற பொல்லாங்கு நீங்கி உலக மக்கள் ஒன்று எனும் எண்ணம் ஏற்பட்டு மனம் விரிவடையும் போது, தன்னலம் நீங்கிப் பொது நலம் ஓங்கும். நூலகத்திலுள்ள நூல்களெல்லாம் இத்தகைய உலகளாவிய நேயத்தை நமக்கு ஊட்டுவனவாக இருக்கவேண்டும் எனப் பாவேந்தர் விரும்புகிருர், 'மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும் மனுேபாவம் வானைப் போல் விரிவடைந்து தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச் 27 13-6